ஊழியர்களின் நலனோம்பலை மேம்படுத்துதல்
மருத்துவ சிகிச்சை நிலையங்களை / கண் சிகிச்சை நிலையங்களை நடாத்துதல்
பொருத்தமான இடத்தில் அல்லது ஊழியர் வேலைத்தளமொன்றைத் தெரிவு செய்து மருத்துவ சிகிச்சை நிலையங்களை நடத்துவதன் மூலம் ஆரோக்கியமான உழைப்போர் செயலணியொன்றை உருவாக்கும்பொருட்டு நடவடிக்கை எடுத்தல்.
ஊழியர்களுக்கு வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்
குறைந்த வருமானம் உள்ள ஊழியர்களின் குடும்பங்களில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொருட்டு சுயதொழில் செயலமர்வுகளை அவர்களின் குடும்பங்களில் ஏனைய அங்கத்தினர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் சுபீட்சமான உழைப்போர் செயலணியொன்றை உருவாக்கும் பொருட்டு நடவடிக்கை எடுத்தல்.
ஊழியர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்
ஊழியர்களுக்காக கைத்தொழில் பாதுகாப்பு, சரியான சுகாதார பழக்க வழக்கங்கள், உற்பத்தித் திறன் என்பவைபற்றி அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்மூலம் வினைத்திறன்மிக்க, புலமைமிக்க ஊழியர் செயலணியொன்றை உருவாக்குதல்.
முன்னறிவித்தலின்றி நிறுவனங்கள் மூடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதில் உள்ள ஊழியர்களுக்கு நிதி மற்றும் ஏனைய கொடைகள்
தொழில்கல்வி மற்றும் மூன்றாம்நிலைக் கல்வி பாடநெறிகளில் ஈடுபடுத்துதல்
முன்னறிவித்தலின்றி நிறுவனங்கள் மூடபபடும் சநதர்ப்பங்களில் அதன் ஊழியர்களுக்கு தொழில் ரீதியான மற்றும் மூன்றாம் நிலை கல்வி பயிற்சிநெறிகளில் ஈடுபடுத்துவதன்மூலம் தொழிற்பயிற்சியுடன் மீண்டும் தொழிலில் ஈடுபடுத்துவதன்மூலம் தொழில் அற்ற தன்மையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்
முன்னறிவித்தல் இன்றி நிறுவனங்கள் மூடப்படும் சந்தர்ப்பங்களில் அதன் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக சுயதொழில் மேனி வனப்புக்கலை, தொழில் முயற்சி செயலமர்வுகள் என்பவற்றை நடாத்துவதன்மூலம் உள்ளூர் சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கு ஊக்குவித்தல் மற்றும் அதற்கான உதவிகளை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் வேலையற்றோரை பங்கேற்கச் செய்தல்.
அவசர சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு மருத்துவ மற்றும் ஏனைய வசதிகளை வழங்குதல்
மருத்துவ உதவிகளை வழங்குதல்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின்மூலம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் சார்ந்த நோய்களுக்கு ஊழியர்கள் பலியான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதன்மூலம் நிர்கதியான ஊழியர்களுக்கு நோயிலிருந்து விடுபடுவதற்கு உதவுதல்.
திடீர் அனர்த்த நிவாரணங்களை வழங்குதல்
வெள்ளப்பெருக்கு / மண்சரிவு / நில நடுக்கம் / தீப்பற்றுதல் மற்றும் நிதியம் அடையாளம் கண்ட அனர்த்தங்களுக்கு ஊழியர்கள் பலியாகின்றபோது புனர்வாழ்வுக்காக நன்கொடைகளையும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களையும் வழங்குவதன் மூலம் நிர்கதியான ஊழியர்களுக்கு அவ்வனர்த்த நிலையிலிருந்து விடுபட உதவி செய்தல்.
தொழில் ரீதியான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தன்மைபற்றி அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்
ஊழியர்களுக்கான தொழில் ரீதியான பாதுகாப்பு, சுகாதார மற்றும் அனர்த்த பாதுகாப்பு முறைகள் தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதன் மூலம் ஆரோக்கியமான பலசாலியான மற்றும் பாதுகாப்பான ஊழியர் செயலணியொன்றை உருவாக்கும் பொருட்டு நடவடிக்கை எடுத்தல்.
ஊழியர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்போது ஊழியர்களுக்கு தற்காலிக உதவிகள்
சட்ட உதவி திட்டம்
அனைத்து கொடுப்பனவுகளுடன் 40,000/= ரூபாக்குக் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவது மற்றும் சட்ட ஆலோசனை பெறுவதற்கு சட்ட முகவர்களை தொடர்புபடுத்துதல் என்பவற்றின் ஊடாக துணிச்சலான ஊழியர் செயலணியொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
அனர்த்தங்களின் போது ஊழியர்களுக்கு அல்லது அவர்களில் தங்கி வாழ்கின்றவர்களுக்கு நிதி ரீதியான மற்றும் ஏனைய பயன்கள்
மரண விபத்து அனர்த்தங்களின் போது நிதி உதவியும் கல்வி கற்கின்ற தங்கி வாழ்பவர்களுக்கு புலமைபரிசில் வழங்குதல்
தொழிற்சாலைகளில் அல்லது பல்வேறு நிறுவனங்களில் அல்லது சுயதொழில்களில் ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டிருக்கின்றபோது மரண விபத்துக்களுக்குப் பலியான சந்தர்ப்பங்களில் அவ்வூழியர்களில் தங்கி வாழ்பவர்களுக்கு நிதி உதவியும் கல்வி கற்கின்ற தங்கி வாழ்பவர்களுக்கு புலமைப்பரிசில்களையும் வழங்குவதன் மூலம் அனர்த்தங்களின்போது ஊழியர்களின் குடும்பங்களைப் பாதுகாத்தல்.
இயற்கை அனர்த்தங்களின் போது நிவாரணங்களும் நிதியுதவியும்
ஊழியர்கள் இயற்கை அனர்த்தங்களுக்குப் பலியாகியுள்ள சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு நிதியுதவியும் புனர்வாழ்வு வசதிகளையும் வழங்கி அவ்வனர்த்தங்களிலிருந்து விடுபடுவதற்கு உதவிசெய்து ஊழியர்களின் குடும்பங்களை மீளக்கட்டியெழுப்புதல்.
முழுமையாக ஊனத்தை ஏற்படுத்துகின்ற அனர்த்தங்களின்போது நிதியுதவியும் ஊனத்திற்குப் பொருத்தமான உபகரணங்களுடன் கல்வி கற்கின்ற தங்கிவாழ்பவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல்
ஊழியர்கள் சேவையிலிடுபட்டிருக்கின்றபோது விபத்துக்களுக்குப் பலியாகி முழுமையான ஊனமுற்ற நிலைக்குள்ளானவர்களுக்கு அந்த ஊனமுற்ற நிலைக்குப் பொருத்தமான உபகரணங்கள் (சக்கர நாற்காலிகள், கைதடிகள், ஊன்றுகோல்கள், செவிப்புலன் உபகரணங்கள், மூக்குக்கண்ணாடிகள்) வழங்குதல். அவ்வூழியர்களில தங்கி வாழ்பவர்களுக்கு சிரம வாசனா புலமைப்பரிசில் வழங்குவதன்மூலம் அனர்த்தங்களின்போது ஊழியர்களின் குடும்பங்களைப் பாதுகாத்து அந்த அனர்த்த நிலையிலிருந்து விடுபட உதவுதல்.
ஊழியர்களின் நலனோம்பலுக்கு அதிசிறந்த சேவையாற்றியுள்ள நபர்களுக்கு பரிசு வழங்கல்
உழைப்புக்கு பெருமைமிகு மருத்துவ உதவிகளை வழங்குதல்
தொழிலாளர்களின் நலனோம்பலுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற மக்கள் பிரதிநிதிகள் அல்லது தொழிலாளர் தலைவர்கள் கடுமையான நோய்களால் பாதிப்புறுகின்றபோது அவர்கள் ஆற்றிய சிறந்த சேவைக்காக உழைப்புக்கு பெருமைமிகு மருத்துவ உதவிகளை வழங்குவதன் மூலம் நிர்கதியான தொழிலாளர் நலன்புரிவோருக்கு உதவுதல்.
உழைப்புக்கு பெருமைமிகு அதிசிறந்த சேவையைப் பாராட்டுதல்
தொழிலாளர்களின் நலனோம்பலுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற மக்கள் பிரதிநிதிகளின் அல்லது தொழிலாளர் தலைவர்களின் அச்சிறந்த சேவையைப் பாராட்டும்முகமாக உழைப்புக்கு பெருமைதரும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் வழங்குவதன்மூலம் தொழிலாளர் நலனோம்பலுக்கு ஊக்கமளித்தல்.