உங்களுடைய நன்கொடைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பிரதான சேவைகள்

  • சேவையிலீடுபட்டிருக்கின்றபோது மரணமடைந்த அல்லது முழுமையாக ஊனமடைந்த நிலைக்குள்ளான ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 60,000/= ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்குதல்
  • மருத்துவ முகாம்கள்/ கண் சிகிச்சை நிலையங்கள் போன்ற மருத்துவ வசதிகளை வழங்குவதன் மூலம் ஊழியர்களின் ஆரோக்கியமான உழைப்போர் செயலணியொன்றை உருவாக்க உதவி செய்தல்.
  • குறைந்த வருமானமுள்ள ஊழியர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
  • சேவை நிலையத்திலிருந்து தம்மை நீக்கியபோது அவர்களுக்கு சட்ட உதவியாக 10,000/= ரூபா வழங்கி நீதிமன்றத்தின் உதவியைப்பெற உதவுதல்.
  • முன்னறிவித்தலின்றி சேவை நிலையம் மூடப்படும் சந்தர்ப்பத்தில் ஊழியர்களுக்கு மீண்டும் தொழில் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான தொழில் தகைமைகளையும் வசதிகளையும் வழங்குவதன் மூலம் மீண்டும் தொழிலில் ஈடுபடுத்துதல்.
  • சேவை நிலையங்களைச் சார்ந்ததாக இயற்கை அனர்த்தங்கள், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், வெள்ளம், மண்சரிவு, தீப்பற்றுதல் போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல்.
  • தொழில் ரீதியான நோய்களுக்குள்ளாகின்ற ஊழியர்களுக்கு அந்நோய்களை சுகப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் நிதி வசதிகளையும் வழங்குதல்.

இது போன்ற சிரம வாசனா நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற நிதி ரீதீயான அல்லது பொருள் ரீதியிலான உதவிகளை வழங்கி இதற்கு உதவ முடியும்.அத்துடன் நீங்களும் புதிய மாற்றமொன்றைச் செய்வதற்கு எமக்கு உதவுங்கள்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்