தொலைநோக்கு

திருப்திமிகு இலங்கையர் தொழிலணி

செயற்பணி

இடைவெளிகளைக் கவனமாக மதிப்பிட்டு, அவற்றினைப் பூரணப்படுத்துவதன் மூலம் வழமான சேமநலன் மற்றும் நிவாரணங்களை வழங்கி ஆதரவளித்துள்ள வேலைச் சூழலொன்றை உருவாக்குவதற்கு உதவுதல். 


விழுமியங்கள்

  1. சிரம வாசனா நிதியத்திடமிருந்து பயனடைகின்ற சேவைநாடுநர்களுக்கு பயனுறுதிவாய்ந்ததும், வினைத்திறனுடையதுமான சேவையை வழங்கும் நோக்கில் ஒழுங்குமுறையான கடப்பாட்டுநிலையை உறுதிப்படுத்துதல்.
  2. சேவைநாடுநர்களுக்கு சேவை வழங்கும் அதேவேளையில், சிரம வாசனா நிதியத்தின் ஒழுங்குகள் ஒழுங்குவிதிகள் மற்றும் முறமையியல்களுக்கு அமைவாக, உயரிய தரமான சேவையை வழங்குதல்.
  3. சிரம வாசனா நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள சேவைகள் தொடர்பாக சேவை நாடுநர்களுக் கிடையில் சிறந்த முறையில் விழுப்புணர்வினை ஏற்படுத்துதல்.

நிதியத்தின் நோக்கம்

  • ஊழியர்களின் நலனோம்பலை மேம்படுத்துதல்.
  • ஊழியர்கள் சேவை செய்த நிறுவனங்கள் முன்னறிவித்தலின்றி மூடப்படும் சந்தர்ப்பங்களில் அங்கு சேவையில் ஈடுபட்டிருந்தோருக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குதல்.
  • அவசர சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு மருத்துவ மற்றும் ஏனைய வசதிகளை வழங்குதல்.
  • ஊழியர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தற்காலிக நன்கொடைகளை வழங்குதல்
  • அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு அல்லது அவர்களில் தங்கி வாழ்கின்றவர்களுக்கு நிதி ரீதியிலான மற்றும் ஏனைய பயன்களை வழங்குதல்
  • ஊழியர் நலனோம்பலுக்காக தலை சிறந்த சேவையாற்றியுள்ள நபர்களுக்கு பரிசுகள் வழங்குதல்.

நிதியத்தின் கடமை / செயல்

  • நிதியத்தின் மேற்படி நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவைப்படுகின்ற அல்லது இடைநேர்விளைவான அனைத்தையும் நிதியத்தின பெயரால் நிறைவேற்றுதல்
  • நிதியத்தின் பயன்களை இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களிடம் எடுத்துச் செல்லும் பொருட்டு நிதியத்தின் மேற்படி நோக்கத்தின் கீழ் வருகின்ற பல்வேறுவகையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து செயற்படுத்தி ஊழியர் நலனோம்பலை உயர்த்துவதன் மூலம் திருப்திகரமான உழைப்போர் செயலணியொன்றை உருவாக்கும் பொருட்டு நடவடிக்கை எடுத்தல்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்